கோட்டக்குப்பம் அல்ஜாமி அத்துர் ரப்பானியா அரபிக் கல்லூரியின் 41-ஆம் ஆண்டு விழா மற்றும் 31-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, இன்று 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மை துணைத் தலைவர் ஆகிய அப்துல் ரகுமான் எக்ஸ் எம்பி அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
திருப்பூரை சேர்ந்த மௌலவி ஜுபைர் ஹஜ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு ஸனது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் ஹாஜி அஷரப் அலி அவர்கள் தலைமை தாங்கினார். முன்னிலையாக கல்லூரியின் செயலாளர் கோசி முஹமது இலியாஸ் அவர்களும் மற்றும் கல்லூரியின் செயற்குழு உறுப்பினர்களும் மூத்த உறுப்பினர்களும் முன்னிலை வகித்தார்கள்.
ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி முஹம்மது யூசுப் ரப்பானி கிராஅத் ஓதினார்கள்.
கல்லூரியின் துணை தலைவர் எஸ் பிலால் முஹம்மது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
கல்லூரியின் துணைத் தலைவர் மௌலவி முஹம்மது ரப்பானி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கல்லூரியின் பொருளாளர் ரஹமதுல்லாஹ் எம் சி அவர்கள் கல்லூரியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார்கள்.
கல்லூரி பேராசிரியர்கள் மௌலவி அபுதாஹிர், சர்தார் மீரான் ஹஜ்ரத் ஹாபிளழ் மொனாசிர் உசைன், மௌலவி ஹாமீம் பாஷா, மௌலவி முபாரக் ,முன்னாள் மாணவர்கள் மௌலவி ஜுபைர் அஹமது ரப்பானி, மௌலவி ஆரிப் அலி ரப்பானி, மௌலவி அப்துல் வாஹித் ரப்பானி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கல்லூரியின் செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி முஹம்மது இப்ராஹிம், முஹம்மது பாரூக், துணைச் செயலாளர் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக், நகராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீத் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
மௌலவி முஹம்மது உமர் ரப்பானி, மௌலவி இர்ஷாத் நஸீர் ரப்பானி, மௌலவி அசாருதீன் ரப்பானி ஆகியோருக்கு ஆலிம் ஸனது வழங்கப்பட்டது.
முஹம்மது தௌசீப் ஆலம், முஹம்மது ஷரப் ஆலம், முஹம்மது அஃப்தாப் பைஜான், முஹம்மது மீரான், ஜமால் அஷ்ரப் ஆகியோருக்கு ஹாபிழ் ஸனது வழங்கப்பட்டது.
இறுதியில் கல்லூரியின் துணைச் செயலாளர் அமீர் பாஷா அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.
நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் மற்றும் வெளியூரை சார்ந்த ஜமாத்தார்கள் ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் கல்லூரியில் நீண்ட நாட்களாக பேராசிரியராக பணி புரியும் சர்தார் ஹஜ்ரத் அபுதாஹிர் ஹஜ்ரத் மற்றும் முன்சி உபைதுர் ரஹ்மான் ஆகியோர்களுக்கு பணியை பாராட்டி விருது வழங்கப்பட்டது.