April 20, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்…!

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் இன்று(29/06/2023) காலை 6:15 மணி அளவில் தியாகத்திருநாள் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஆயிரக்கணக்கான ஜமாத்தார்கள் தக்பீர் முழக்கத்தோடு ஈத்கா மைதானம் நோக்கி சென்றனர்.

ஈத்காகாவில், ஈகை திருநாள் சிறப்பு பற்றியும், ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் பற்றியும் மௌலவி பஜுலுதீன் அவர்கள் சிறப்பு பயான் செய்தார். அதன்பின், ஹஜ் பெருநாள் தொழுகை காலை சரியாக 7:00 மணி அளவில் நடைபெற்றது.

தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும், அனைவரின் நல்வாழ்வுக்காகவும், நலனுக்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது.

பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 400 பயனாளிகளுக்கு வினியோகம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் உள்ள எல்லைகள் எந்த நேரத்திலும் அடைக்கப்படலாம்? கோட்டக்குப்பம் D.S.P அஜய் தங்கம் அவர்களின் பேட்டி.

கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

Leave a Comment