April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு.

கோட்டக்குப்பத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் தொடர் போராட்டம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களையும், விழுப்புரம் மாவட்ட செயற்பொறியாளர் (பொது)அவர்கள், SE அவர்கள், கண்டமங்கலம் செயற்பொறியாளர் (EE) அவர்கள் மற்றும் வானூர் வட்டாட்சியர் என அனைவருக்கும் இன்று ஒரே நாளில் தலைவர் (மாநில இணைச்செயலாளர்) அன்சர் பாஷா அவர்களின் தலைமையில், துணைத் தலைவர் பயாஸ், பொருளாளர் கமால் ஹசேன், இணை செயலாளர் சாகுல் ஹமீத் மற்றும் துணைச் செயலாளர் துபைல் அஹமத் கொண்ட குழுவினர் மனு அளித்தனர். இவர்களுடன், விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பின் பொருளாளர் முபாரக் அலி உடன் இருந்தார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், உணவு மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது

Leave a Comment