29.2 C
கோட்டக்குப்பம்
November 22, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொது நல மனு.

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 16/12/2023 சனிக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையரிடம், பொது வெளியில் திரியும் நாய், மாடு, குரங்கு போன்ற விலங்குகளை பிடிப்பது சம்பந்தமாக பொது நல மனு வழங்கப்பட்டது.

அம்மனுவில், “நமது கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலைகளில் மாடுகள் நடமாடினால் அதை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தாங்கள் கடந்த மாதம் பொதுமக்களுக்கு தேவையான ஒரு சட்டம் ஏற்றிநீர்கள், ஆனால் அது இன்னும் நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது. எம் ஜி ரோடு, ECR ரோடு மற்றும் ஊருக்குள்ளும் மாடுகள் பொது போக்குவரத்திற்கு இடையூராக சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது. அதேபோல் ஊரின் எல்லா தெருகளிலும் கும்பல் கும்பலாக தெரு நாய்கள் சுற்றிக்கொண்டு இருக்கிறது, அதேபோல் குரங்குகளும் கூட்டம் கூட்டமாக சுற்றிக்கொண்டு திரிகிறது, இதுவெல்லாம் பொது மக்களுக்கு மிகவும் இடையூறாகவும், அதிகளவில் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. எனவே தாங்கள் இவ்விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் அச்சமின்றி வாழ உறுதி செய்ய வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்படுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மின்வாரியத்தில் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு

கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

Leave a Comment