நாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் முனைவர் நா இளங்கோ அவர்கள் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின உரை நிகழ்த்தினார். சிறுபான்மை மக்கள் தங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அன்பின் வழியாகவும் பல்சமூக உறவாடல் வாயிலாகவும் இன்னும் உறுதியோடு களத்தில் நிற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு உற்ற துணையாக பெரும்பான்மை சமூகத்தினர் கரங் கோர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.