தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக (07-03-2024) இன்று கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்களிடம் அளிக்கப்பட்டது.
அதில், கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாகவும், இதன் விளைவாக பல தொந்தரவுகள் பொதுமக்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சமூக விரோதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து உள்ளதையும், சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த 9-வயது சிறுமியின் படுகொலையின் காரணமாக பெண்கள், சிறுமிகள் பாதையில் செல்ல அச்சப்படுகிறார்கள் என்பதையும் பொதுமக்களின் இந்த அச்சத்தை போக்க காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபடுமாறும், தெரு சந்திப்புகளில் கூட்டமாக நின்று மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜமாத்தின் சார்பாக பொதுநலன் கடிதம் வழங்கப்பட்டது.