April 20, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நோன்பு பெருநாள்.  [புகைப்படங்கள்]

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை சரியாக இன்று(11/04/2024) காலை 7:30 மணிக்கு ஈத்காவில் நடைப்பெற்றது. ஜமாத்தார்கள் அனைவரும் சரியாக காலை 6:45 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான ஜமாத்தார்கள் ஈத்கா மைதானம் நோக்கி சென்றனர்.

பிறகு, ஈத்கா மைதானத்தில் மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரி அவர்கள் “வாக்குரிமை அவசியத்தையும் மற்றும் ஒற்றுமைத்துவத்தை” பற்றி சிறப்பு பயான் செய்தார். அதன்பின், நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும், அனைவரின் நல்வாழ்வுக்காகவும், நலனுக்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது. பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

புது வடிவம் பெறும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு: சைடு வாய்க்கால் மற்றும் நடைபாதை அமைப்பு.

சின்ன கோட்டக்குப்பம் தர்பிய்யதுல் பனாத் பெண்கள் அரபிக் கல்லூரி & மஸ்ஜிதே பிலாலலிய்யா வல் மத்ரஸா சார்பில் முப்பெரும் விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment