நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் வாக்காளர்கள் 100% வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், அரசு பணியாளர் அடையாள அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, இந்திய கடவுச்சீட்டு உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளர் அடையாளச் சான்றாக கொண்டு வாக்களிக்கலாம்.
பூத் ஸ்லீப் வரவில்லை என இருந்து விடாமல், வாக்காளர் லிஸ்ட்டில் பெயர் உள்ளவர்கள், தங்களிடம் உள்ள ஆவணங்களை எடுத்துக்கொண்டு தங்களின் சார்ந்துள்ள வாக்கு சாவடிக்கு செல்லும் முன் 200 மீட்டர் தொலைவில் இருக்க கூடிய உதவியாளர்களை அனுகி வரிசை எண் மற்றும் பாகம் எண் பெற்றுகொண்டு வாக்கு சாவடிக்கு செல்ல கேட்டுக்கொள்கிறோம். அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ளபடி தங்களின் வரிசை எண் மற்றும் பாகம் என்னை குறித்து வைத்து வாக்கு செலுத்தலாம்.
காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் வாக்களிக்க வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு செல்ல சிறப்பு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வாகன உதவி தேவைப்படுவோர் 1950 என்ற இலவச என்னை அழைத்து பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைவரும் வாக்களித்து இந்த முறை 100% வாக்குப்பதிவு என்ற மகத்தான சாதனை படைப்போம்.
𝓚𝓸𝓽𝓽𝓪𝓴𝓾𝓹𝓹𝓪𝓶_𝓣𝓲𝓶𝓮𝓼