கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியத்தால் ஜமியத் நகர், சமரச நகர், பர்கத் நகர், சின்ன கோட்டக்குப்பம், இந்திரா நகர், எம்ஜி ரோடு, இப்ராஹிம் கார்டன், மரைக்காயர் தெரு, பழைய பட்டினப்பாதை போன்ற பல பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக ஜமியத் நகர் பகுதி வெள்ளைக்காடாகியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தற்போது வரை ஒருவர்கூட தங்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களிடம் எந்தவித விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாதது, நகராட்சி நிர்வாகத்தின் தவறான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. பிற பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான தகவல்கள் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோட்டக்குப்பம் நகராட்சி மட்டும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற இயற்கை சீற்றங்களுக்கு முன்பே தயாராக இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்டு. ஆனால், கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் தனது கடமையை சரியாக செய்யத் தவறிவிட்டது. இந்த சம்பவம், நகராட்சி நிர்வாகத்தின் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.