கோட்டக்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிளை சார்பாக நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
அதன்படி நேற்று 18-12-2024, ஜமியத் நகர் பகுதியில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வீதம், மொத்தம் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.